About Madurai Muthu
தமிழகத்தின் முதல் stand up comedian – மதுரை முத்து
-
-
தமிழகத்தின் முதல் stand-up காமெடியன். முதல் முதலாக stand-up காமெடியை தொலைகாட்சியில் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும்.
-
M.com பட்டதாரியான இவர். மதுரை, திருமங்கலம் அருகே உள்ள T.அரசபட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து, எவ்வித பின்புலமும் இல்லாமல் கலைத்துறைக்கு வந்து தன் கடுமையான உழைப்பால் உயர்ந்தவர்.
- 2005ல் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது கலைப்பயணத்தை துவங்கிய இவர் கலைத்துறையில் 18 ஆண்டுகள் பயணம் செய்து, இதுவரை 80 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார், 6000 திற்கும் மேற்பட்ட உள்ளூர் மேடைகள் கண்ட இவர்.
-
எந்தவித குறிப்பும் கையில் இல்லாமல் 4 மணி நேரத்திற்கு மேல் நகைச்சுவையாய் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர்.
-
கலக்கபோவது யாரு 50 வாரங்கள், அசத்தபோவது யாரு 200 வாரங்கள், சண்டே கலாட்டா 650 வாரங்கள், காமெடி ஜங்ஷன் 370 வாரங்கள் என்று தொடர்ந்து கலக்கிக்கொண்டிருக்கிறார்.
-
கலக்கபோவது யாரு, அசத்தப்போவது யாரு ஆகிய இரண்டு நிகழ்ச்சியிலும் காமெடி கிங் என்று Title Winner பட்டம் வென்ற ஒரே கலைஞன் இவர் மட்டுமே.
-
சின்னக்கலைவாணர் விருது, நகைச்சுவை சக்கரவர்த்தி விருது உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றிருக்கிறார்.
-
15 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
-
“பிறரை சிரிக்க வைப்பவர்களை ஆண்டவன் அழ வைப்பான்” என்று சார்லி சாப்ளினின் கூறியதை போல, இவரது சொந்த வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளில் இருந்து மீண்டு, தன் குழந்தைகளுக்காகவும், மக்களை மகிழ்விப்பதற்காகவும் மீண்டும் கலைபாதையில் பயணித்து முத்திரை பதித்து வருகிறார்.
-
பட்டிமன்ற நடுவராக இருந்து தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேச்சாளர்களை மேடை ஏற்றிவிட்டு அழகு பார்த்தவர்.
-
விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் stand-Up காமெடியனாக தொடங்கிய கலைப்பயணம். இன்று அதே நிகழ்ச்சியின் Judge ஆகா உயர்ந்து கலக்கி வருகிறார்.
- குக் வித் கோமாளியில் பங்கேற்று property காமெடி எனும் புதிய தனித்துவமான நகைச்சுவை உருவாக்கி, அதன் மூலம் மக்களை மகிழ்வித்தார்.
- மதுரைவீரன், அகிலன், சபாபதி, குற்றம்குற்றமே, பாபா பிளாக்-சீப் உள்ளிட்ட 15ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.
- தனது சீரிய முயற்சியால் யாழ் இசைக்குழு எனும் இசை கச்சேரி குழு அமைத்து அதன் மூலம் இசையும்-சிரிப்பும் சேர்ந்தே கொடுத்து அசத்தி வருகிறார். மேலும் அதன் மூலம் நலிந்த இசைக்கலைஞர்களுக்கு உதவி, அவர்களுக்கு புத்தாக்கம் தருகிறார்.
-
பள்ளி, கல்லூரி மற்றும் நிறுவனங்களில் தன்னம்பிக்கையூட்டும் பேச்சாளராகவும். 50க்கும் மேற்பட்ட பேச்சாளர்களையும், கலைஞர்களையும் வைத்து பட்டிமன்றமும், பல்சுவை-கலை நிகழ்சிகளும் நிகழ்த்தி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பு மக்களையும் தனது நகைச்சுவையால் மகிழ்வித்து வருகிறார்.
-